தென்னாபிரிக்காவை வெற்றி கொண்ட பாகிஸ்தான்

தென்னாபிரிக்காவை 33 ஓட்டங்களால் வெற்றி கொண்ட பாகிஸ்தான்

by Staff Writer 03-11-2022 | 7:38 PM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இன்றைய(03) போட்டியில் பாகிஸ்தான் அணி, டக்வத் லூயிஸ் முறையில் 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

சிட்னியில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். 

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை பெற்றது. 

போட்டியின் போது மழை குறுக்கிட்டமையால் தென்னாபிரிக்காவுக்கு 14 ஓவர்களில் 142 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

எனினும், தென்னாபிரிக்க அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களையே பெற முடிந்தது.