பொரளை சிறிசுமண தேரருக்கு விளக்கமறியல்

பொரளை சிறிசுமண தேரருக்கு நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Bella Dalima 02-11-2022 | 6:40 PM

Colombo (News 1st) பொரளை சிறிசுமண தேரரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

300 கோடி ரூபாவிற்கும் அதிகமான பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின், வர்த்தகக் குழுமத்தின் பணிப்பாளராக இருந்து, மோசடி நடவடிக்கைகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் தேரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான திலினி பிரியமாலி மற்றும் இசுரு பண்டார ஆகியோர் Skype தொழில்நுட்பத்தின் ஊடாக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக ஒன்றாகவும் தனித்தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரான பொரளை சிறிசுமண தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறும் நடவடிக்கை நிறைவடையாத நிலையில், பிணை வழங்கப்பட்டால் மேலதிக விசாரணைகள் தடைப்படலாம் என விசாரணை அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

எனவே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தேரரையும் விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.