நியூஸிலாந்தை 20ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து

T20 உலகக்கிண்ணம்: நியூஸிலாந்தை 20 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து

by Bella Dalima 01-11-2022 | 6:23 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இங்கிலாந்து 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றது.

Jos Buttler 73 ஓட்டங்களையும் Alex Hales 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

சவாலான வெற்றியிலக்கை நோக்கி  துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது

நியூஸிலாந்து அணி சார்பில் Glenn Phillips 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதேவேளை, T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில், ஆப்பானிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

அதனடிப்படையில், குழு ஒன்றில் 5 புள்ளிகளைப் பெற்று நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

4 புள்ளிகளுடன் இலங்கை அணி நான்காவது இடத்தில் உள்ளது.