.webp)
Colombo (News 1st) தரம் குறைந்த சேதன பசளையை விநியோகிக்கும் நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித கொடுப்பனவுகளையும் குறித்த நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுக்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
இம்முறை பெரும்போகத்திற்கு தேவையான உரத்தினை விநியோகிப்பது தொடர்பில் நாட்டில் சேதன பசளை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பெரும்போகத்தில் நெற்செய்கைக்கு 30% சேதன பசளையும் 70% இரசாயன பசளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முறை பெரும்போகத்தில் நெற்செய்கைக்காக ஒரு 1,50,000 மெட்ரிக் தொன் சேதன பசளை தேவைப்படுகிறது. எனினும், 80,000 மெட்ரிக் தொன் சேதன பசளை மாத்திரமே தற்போது உர உற்பத்தி நிறுவனங்களிடம் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.