பொலிஸ் சார்ஜன் கொலை: நால்வர் கைது

கெப்பித்திகொல்லாவயில் பொலிஸ் சார்ஜன் கொலை: நால்வர் கைது

by Staff Writer 01-11-2022 | 10:20 AM

Colombo (News 1st) கெப்பித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது பொலிஸ் சார்ஜன் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20, 29, 30 மற்றும் 37 வயதான நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கெப்பித்திகொல்லாவ - ரம்பகெப்புவெவ பகுதியில் நேற்றிரவு(31) ஏற்பட்ட அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளாகி பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பகுதியை சேர்ந்த 54 வயதான பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி >>>>