அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக நாளை (02) ஆர்ப்பாட்டம்

by Staff Writer 01-11-2022 | 8:10 PM

Colombo (News 1st) அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நாளை (02) கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருதானையில் இருந்து  நாளை பிற்பகல்   கோட்டை ரயில் நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும்  நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினரை இன்று முற்பகல் சந்தித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், நாளையை ஆர்ப்பாட்டம் தொடர்பில் கலந்துரையாடினர்.

அடக்குமுறைகளுக்கு எதிரான ஒன்றிணைந்த பிரகடனத்தில் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டது.

நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 43 ஆம் செயலணி, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட சுமார் 20 அரசியல் கட்சிகளும்,  சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள பேராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.