ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 31-10-2022 | 2:21 PM

Colombo (News 1st) ஹிக்கடுவ - திராணகம பகுதியில் இன்று(31) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் ஹிக்கடுவ, களப்பு பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 26 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். 

நீதிமன்ற நடவடிக்கைக்காக சென்றுகொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.