நாளை(1) முதல் 4ஆம் திகதி வரை 2 மணி நேர மின்வெட்டு

நாளை(01) முதல் 4ஆம் திகதி வரை 2 மணித்தியால மின்வெட்டு

by Staff Writer 31-10-2022 | 4:23 PM

Colombo (News 1st) நாளை(01) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் W வரையிலான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.