தொற்றா நோய்களால் நாட்டில் 83% மரணங்கள் - அமைச்சு

தொற்றா நோய்களால் நாட்டில் 83 வீத மரணங்கள் - சுகாதார அமைச்சு

by Staff Writer 31-10-2022 | 2:45 PM

Colombo (News 1st) நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களினால் உயிரிழப்பதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மாத்திரமே தேவைப்படுகின்ற போதிலும், அநேகமானோர் அதிகளவான உப்பை சேர்ப்பதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன குறிப்பிட்டார்.