T20 உலகக்கிண்ணம்: பங்களாதேஷ் 3 ஓட்டங்களால் வெற்றி

T20 உலகக்கிண்ணம்: சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி

by Staff Writer 30-10-2022 | 5:00 PM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சிம்பாப்வே அணிக்கெதிரான சுப்பர் 12 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

சிம்பாப்வே அணிக்காக Richard Ngarava மற்றும் Blessing Muzarabani ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.