தடுத்துவைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க திட்டம்

சுங்கப்பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அரச தேவைகளுக்காக விடுவிக்க தீர்மானம்

by Staff Writer 30-10-2022 | 5:10 PM

Colombo (News 1st) பல்வேறு சட்ட காரணங்களுக்காக சுங்கப் பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அரசின் தேவைகளுக்காக விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்கீழ் தற்போது கடுமையான வாகனப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பொலிஸ் உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.