.webp)
Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சுப்பர் 12 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் 05 விக்கெட்களும் 49 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய தென்னாபிரிக்காவின் 02 விக்கெட்கள் 03 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
தென்னாபிரிக்கா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.