65 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து

T20 உலகக்கிண்ணம்: 65 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து

by Bella Dalima 29-10-2022 | 6:08 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

168 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

Daryl Mitchell மற்றும் Glenn Phillips ஆகியோர்​ 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.

Glenn Phillips 10 பௌண்டரிகள், 04 சிக்ஸர்களுடன் சதம் கடந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி  19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

குசல் மென்டிஸ் மற்றும் பெத்தும் நிஸங்க இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்டத்தை வழங்கினர். எனினும், பெத்தும் நிஸங்க ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது 05 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.

இவற்றில் 03 விக்கெட்களை Trent Boult கைப்பற்றினார்.

சரித் அசலங்க 04 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சாமிக்க கருணாரத்ன 03 ஓட்டங்களுடன் வௌியேறினார்.

அணித்தலைவர் தசுன் ஷானக்க இறுதிவரை போராடிய போதிலும் அவரால் 35 ஓட்டங்களையே பெற முடிந்தது.