.webp)
Colombo (News 1st) தமிழ் பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி தொலைக்காட்சியின் 24 ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று தற்போது நடைபெற்று வருகிறது.
மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 6 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உள்ளிட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தென்னிந்திய பின்னணிப் பாடகர்களான சத்தியபிரகாஷ், ஹரிப்பிரியாவுடன் நம் நாட்டுக் கலைஞர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர்.