.webp)
Colombo (News 1st) பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான 13,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக வங்கியூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவியின் மூலம் பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளச் செய்கைக்கு தேவையான முழுமையான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்கான முதல் தொகுதி யூரியா உரத்தை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள விவசாய சேவை நிலையங்களுக்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு கோரப்பட்ட இரண்டாவது விலை மனு கோரலின் பிரகாரம், 1,20,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய இரண்டாவது கப்பல் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளது.