சிரச தொலைக்காட்சியில் The Voice Sri Lanka இரண்டாம் கட்டம் ஆரம்பம்

சிரச தொலைக்காட்சியில் The Voice Sri Lanka இரண்டாம் கட்டம் ஆரம்பம்

சிரச தொலைக்காட்சியில் The Voice Sri Lanka இரண்டாம் கட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

29 Oct, 2022 | 7:36 pm

Colombo (News 1st) உலகின் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம் இன்று இரவு 8.30-க்கு ஆரம்பமாகின்றது.

இலங்கை ரசிகர்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சியின் அனுபவத்தை முதற்தடவையாக வழங்கிய சிரச தொலைக்காட்சி, The Voice நிகழ்ச்சியின் ஊடாக மீண்டும் தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் நிலைநாட்டியுள்ளது.

180 நாடுகளில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட The Voice நிகழ்ச்சியின் உரிமத்தை ITV Studios கொண்டுள்ளது.

இதற்கு முன்னரும் சிரச தொலைக்காட்சி ஊடாக  Voice Teens மற்றும் The Voice நிகழ்ச்சிகள் ஊடாக எம் நாட்டு திறமையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதன் போட்டியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் Voice Global-க்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சர்வதேச அளவில் இலங்கைக்கும் பெருமை சேர்த்தனர்.

இம்முறை The Voice Sri Lanka போட்டி நிகழ்ச்சியின் நடுவர்களாக உமாரியா சின்ஹவன்ஸ, ஷஷிகா நிசங்சலா, கசுன் கல்ஹார, பாத்திய ஜயக்கொடி மற்றும் சந்துஷ் வீரமன் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

இன்று முதல் வார இறுதி நாட்களில் இரவு 8.30-க்கு சிரச தொலைக்காட்சியில் The Voice Sri Lanka போட்டி நிகழ்ச்சியை நீங்கள் பார்வையிடலாம்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்