.webp)
Colombo (News 1st) இலங்கையின் கராத்தே தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சு நியமித்துள்ளது.
சென்செய் T.D.தரங்க பெர்னாண்டோ தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் சென்செய் அன்ரோ தினேஷ், சென்செய் W.M.M.மனோஜ் உனந்தென்ன, சென்செய் B.A. ரத்னதேவ, சென்செய் C.J. சமரசேகர ஆகியோர்
தேசிய தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளன பொதுச்செயலாளர் சென்செய் B.M.கீர்த்தி குமாரவால் வழங்கப்பட்டது.
தேசிய கராத்தே அணியின் தெரிவு, சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியினை தெரிவுசெய்தல் ஆகியவை குறித்த குழுவின் பணியாகும்.
இலங்கையில் நவம்பர் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டிக்கான ஏற்பாடுகளும் தேசிய தெரிவுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.