பொலிஸ் உத்தியோகத்தருடன் சர்ச்சை; துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் காயம்

பொலிஸ் உத்தியோகத்தருடன் சர்ச்சை; துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் காயம்

எழுத்தாளர் Bella Dalima

28 Oct, 2022 | 6:45 pm

Colombo (News 1st)  மாத்தறை – திகஹொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 16  வயதான  சிறுவன் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ்  அதிகாரி ஒருவருடனான சர்ச்சையின் போது, அவரின் துப்பாக்கி வெடித்ததில் குறித்த சிறுவன் மீது சூடு  விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 திஹகொட – நாஇம்புல பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்த போது மூவர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இருவர் பொலிஸ் காவலில் இருந்த போது, அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் இதன்போதே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

காயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்