பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே வெற்றி

T20 உலகக்கிண்ணம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே ஒரு ஓட்டத்தால் வெற்றி

by Bella Dalima 27-10-2022 | 8:23 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓட்டங்களில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்களை இழந்து 130 ஒட்டங்களைப் பெற்றது. 

அணி சார்பில் Sean Williams அதிகூடிய ஒட்டங்களாக 31 ஒட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். Bradley Neil Evans 19 ஓட்டங்களையும் Craig Ervine 19 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

பாகிஸ்தான் சார்பில் Shan Masood 44 ஒட்டங்களையும் Mohammad Nawaz 18 ஓட்டங்களையும் Shadab Khan 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

தொடக்க ஆட்டக்காரர் Babar Azam 4 ஓட்டங்களுடனும், Mohammad Rizwan 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.