நவம்பர் 14ஆம் திகதி Budget சமர்ப்பிக்கப்படவுள்ளது

2023 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

by Bella Dalima 27-10-2022 | 6:35 PM

Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,  இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22 ஆம் திகதி மாலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 08 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.