.webp)
கொழும்பு: பெருமிதத்துடன், உள்நாட்டிலேயே வளர்ந்த இலங்கை வர்த்தக நாமமான காகில்ஸ் புட்சிட்டி, அதன் 500 ஆவது சில்லறை விற்பனையகத்தை திறந்து வைத்து, மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் துணிச்சலான மற்றும் சுறுசுறுப்பான 39 வருடகால பயணத்தில், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் சில்லறை வணிகச் சங்கிலியானது உள்நாட்டு சுற்றுப்புறங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்படுத்தல்கள், அதன் விற்பனையகங்களைச் சுற்றி விரிவடைந்து வளர்ச்சி அடைதலுடன் ஒரே நேரத்தில் நாட்டில் சில்லறை பல்பொருள் அங்காடி வணிகத்தின் ( supermarket business)பரிணாமத்தை பட்டியலிட்டுள்ளது.
சர்வதேச பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக தன்னைத் தரப்படுத்துவதன் மூலம், காகில்ஸ் புட்சிட்டி தனது அடிச்சுவடுகளைப் பின்பற்றிய ஏனையவர்களுக்கு உயர் மட்டங்களை அமைக்க வழிவகுத்த அதே நேரத்தில், அதன் வெற்றி இத்துறையில் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க உதவியது. காகில்ஸ் புட்சிட்டியானது இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வெற்றி பெற்ற ஒரு வர்த்தக நாமமாகத் திகழ்வதுடன், பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு சமூகத்தின் மீது நீண்டகால மற்றும் நிலையான பயன்மிகு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காகில்ஸ் புட்சிட்டி, காகில்ஸ் இன் முக்கிய மதிப்பீடுகளில் இருந்து உருவான சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன், மக்களின் வாழ்வாதாரத்தை தரமுயர்த்த முயற்சி செய்கின்றது. 25 மாவட்டங்களிலும் இருப்பதன் மூலம், நகர்ப்புறங்களுக்கு அப்பால் இலங்கையர்களுக்கு பல்பொருள் அங்காடி அனுபவத்தை அறிமுகப்படுத்தியது. 2004 ஆம் ஆண்டு வவுனியா காகில்ஸ் புட்சிட்டியை நிறுவி, தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்குள் நுழைந்த முதலாவது நிறுவனமாக காகில்ஸ் திகழ்கிறது.
4 வருடங்களில் கிழக்கு நோக்கி நகர்ந்த அந்நிறுவனம், போர் நடைபெற்ற காலமாக இருந்த போதிலும் 2007 ஆம் ஆண்டு திருகோணமலையில் காகில்ஸ் புட்சிட்டி எக்ஸ்பிரஸ் ஒன்றையும் நிறுவியது. இன்று வரை வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் ஒரேயொரு பல்பொருள் அங்காடியாகவும் திகழ்கிறது.
காகில்ஸ் புட்சிட்டி ஸ்தாபிக்கப்பட்ட போது மேல்தட்டு மக்களுக்கு சேவையாற்றியதில் இருந்து, இன்று அனைத்து இலங்கையர்களுக்கும் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் வழங்கி வாழ்வாதாரத்திற்கான வழிமுறையாக விளங்குகிறது.
காகில்ஸ் புட்சிட்டி 365 நாட்களும் திறந்திருக்கும், இது நாட்டில் மில்லியன் கணக்கான மக்களை ஒருபோதும் தவிக்க விடாமல் தொற்றுநோய்கள் பரவிய காலங்களிலும் ஒரு உண்மையான வியாபார நாமமாக செயற்பட்டது. இலங்கையின் எதிர்கால செயல் விளைவுகளை அழகுபடுத்துவதற்கு குழுக்களுக்கு வளங்களை வழங்குவதன் மூலம், காகில்ஸ் முன் சிறு பராய கல்வித் திட்டமானது 8000 இற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாதகமான நிலையினை உருவாக்கி, அவர்களின் எதிர்காலத்திற்கான நிலையான அடித்தளத்தை வழங்கியுள்ளது.
வாழ்க்கைக்கு ஊட்டமளிப்போம் என்ற அதன் வியாபார நாம நெறிமுறைகளுடன், நிறுவனம் லசாலியன் சமூகக் கல்விச் சேவைகளுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட, அவர்களின் சமூக உணவுத் திட்டத்துடன் அதன் மனிதாபிமான முயற்சிகளையும் முன்னெடுத்தது. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஏற்கனவே பின்தங்கிய நகர்ப்புறங்களில் உள்ள 3,300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளை வழங்கியுள்ளது.
பொருளாதார நோக்கில் பார்க்கும்போது, காகில்ஸ் புட்சிட்டி உள்நாட்டு வர்த்தக நாமங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் தொழில்முனைவோரை ஊக்குவித்துள்ளது. அவர்களில் பலர் தங்கள் வணிகங்களை மேம்படுத்தியுள்ளனர் மற்றும் நிறுவனம் வழங்கும் ஆதரவைப் பற்றி நம்பிக்கையுடன் உள்ளனர்.
காகில்ஸ் புட்சிட்டி பல சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வர்த்தக நாமங்களை ஆதரித்து புதிய வகைகளை உருவாக்க அவர்களுக்கு உதவியுள்ளது. காகில்ஸ் புட்சிட்டி மிகத் துல்லியமான தர நிர்ணயங்களை சந்திக்கின்றன என்பதை உறுதி செய்வதே முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இது நுகர்வோருக்கு புதிய மற்றும் மிகவும் சுகாதாரமான தயாரிப்புகளை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், இலங்கை உயர்ந்த தரமான வரையறைகளை கடைபிடிக்கிறது என்பதை உலகிற்கும் எடுத்துக்காட்டுகிறது.
இம் மூலோபாயத்தின் மூலம், காகில்ஸ் புட்சிட்டி, பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை ஆதரிக்க முடிந்தது. காகில்ஸ் விநியோகச் சங்கிலியில் பணிபுரியும் விவசாயிகள் தங்கள் முயற்சிகளுக்கு அதிக விலையைப் பெறுகிறார்கள், இதனால் அதன் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையைப் பெறுகிறார்கள் என்று உலக வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. கேட்ஸ் அறக்கட்டளையானது, காகில்ஸின் மதிப்பீட்டு விகிதாசார அளவீடுகளை உலக அளவில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, பின்பற்றத்தக்க ஒரு மாதிரியாக அறிவித்தது.
சந்தைகளை அணுகுவது உள்நாட்டு விவசாயிகளுக்கு எப்போதுமே தடையாக இருந்து வருகிறது, ஆனால் காகில்ஸ் இலங்கை விவசாயிகளுக்கு புதுமையான மற்றும் சுகாதாரமான தயாரிப்புகளை வழங்குவதற்காக தனது பண்ணை முதல் மேசை வரை என்ற எண்ணக்கருவில் புதிய விளைபொருட்களை நாடு முழுவதும் அனுப்புவதன் மூலம் இலங்கை விவசாயிகள் அணுகுவதற்கு தயாராக உள்ள சந்தையை உருவாக்கியுள்ளது.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக புதிய விளைபொருட்களை வாங்குவதன் மூலம், காகில்ஸ் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், அதன் சருபிம நிதியத்தின் மூலம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு அளித்தது.
இன்று, காகில்ஸ், 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வலையமைப்பிலிருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்து, புதிய உற்பத்திகளை சேகரிப்பதில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. அத்தோடு தேசிய உற்பத்தியில் 4% பழங்கள் மற்றும் காய்கறிகளில் பங்களிப்புச் செய்கிறது - இது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அத்தோடு மட்டுமல்லாது இலங்கையின் மிகப்பெரிய புதிய பால் சேகரிப்பாளராகவும் திகழ்கிறது மற்றும் தேசிய பால் உற்பத்தியில் 14% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. இந்நிறுவனம் கால்நடைகள், கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் முன்னணி பங்களிப்பாளராகவும் திகழ்கின்றது.
காகில்ஸ் புட்சிட்டி அதன் விரிவடைந்து வரும் வலையமைப்பிற்கு ஏற்ப குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 2019 ஒக்டோபரில் 400 விற்பனையகங்களில் இருந்து, காகில்ஸ் தனது 500 ஆவது விற்பனையகத்தைத் திறந்து வைத்து 2022 ஆம் ஆண்டுக்குள் 100 விற்பனையகங்களை அதிகரித்துள்ளது. இந்த விரிவாக்கம் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான நல்ல நடைமுறைகளை வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்க உறுதி பூண்டுள்ளது. அதன் மருந்தகம், அனைவருக்கும் மருந்துகளை எளிதில் அணுகும் இடமாக மாறியுள்ளது. அதன் வளாகத்தில் வணிக வங்கியைக் கொண்ட முதல் பல்பொருள் அங்காடி மற்றும் அதன் விற்பனையகங்களில் கடன் அட்டை பட்டியல்களை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சுப்பர் மார்க்கட் இதுவாகும்.
2004 ஆம் ஆண்டில், காகில்ஸ் நிறுவனம் அல்பர்ட் ஏ.பேஜ் அறக்கட்டளையை நிறுவி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழைப் பயிற்றுவிக்கவும், மேம்படுத்தவும் மற்றும் வழங்கவும் துணை நின்றது.
காகில்ஸின் எண்ணமானது, ஒரே நேரத்தில் தேசத்திற்கு சேவை செய்வதிலும் உள்நாட்டு சமூகங்களை மேம்படுத்துவதிலும் உள்ளது.