.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (26) பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சாலை முகாமையாளருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்று மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளையும் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை சாலை முகாமையாளரை இடம் மாற்றுமாறு கோரி வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.