இலங்கையை 7 விக்கெட்களால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

T20 உலகக்கிண்ண சுப்பர்-12: இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் வெற்றி

by Bella Dalima 25-10-2022 | 8:17 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண தொடரில் சுப்பர்-12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது. 

பேர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 106 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்தது.

தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களைப் பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பானுக்க ராஜபக்ஸ, அணித்தலைவர் தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் பத்திற்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 

உபாதையிலிருந்து மீண்ட பெத்தும் நிஸங்க அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றார். சரித் அசலங்க 38 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரத்ன 14 ஓட்டங்களையும் கடைசி நேரத்தில் பெற்றனர்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவின் Marcus Stoinis தனது அணிக்கு 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். Aaron Finch 31 ஓட்டங்களையும் Glenn Maxwell 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

அவுஸ்திரேலியா 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை எட்டியது.