.webp)
Colombo (News 1st) தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அகதிகள் முகாமில் வசிக்கும் 48 இலங்கை அகதிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கப்படும் என தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகளின் புனர்வாழ்வு முகாமிற்கு மாதாந்த நிதியுதவி வழங்கும் செயன்முறை அடுத்த மாதம் முதல் எளிமைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.
மரக்காணம் - கீழ்புதுப்பட்டு பகுதியில் வசிக்கும் 440 அகதிகளுக்கு இலவச வீடுகள் நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்த போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.