.webp)
Britain: பிரித்தானியாவின் 57 ஆவது பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த வருடத்திற்குள் பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது பிரதமர் இவர்.
பிரித்தானிய பிரதமராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ், பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜிநாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன. கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பென்னி மார்டன்ட் விலகியதைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் மூன்றாம் சார்லஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
மன்னரின் அழைப்பை ஏற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரிஷி சுனக் இன்று சென்றிருந்தார்.
இதன்போது, மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரித்தானிய பிரதமராகியுள்ளார்.