கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 25-10-2022 | 4:38 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர், 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.