.webp)
Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்றில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஹோபர்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
நெதர்லாந்து அணியின் அழைப்பையேற்று களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு 145 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.