பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு

by Staff Writer 24-10-2022 | 9:12 PM
Colombo (News 1st) பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக்(Rishi Sunak) தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் போட்டிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் நேரம் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், தாம் போட்டியிலிருந்து விலகுவதாக Penny Mordaunt அறிவித்தார். இதனையடுத்து ரிஷி சுனக் பிரதமராக தெரிவானார். பிரித்தானியப் பிரதமராகும் முதலாவது ஆசிய வம்சாவளி பிரித்தானியர் இவராவார். ரிஷி சுனக் நாளை(25) உத்தியோகபூர்வமாக பதவியேற்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில் ரிஷி சுனக்குடனும் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் லண்டனுக்கு திரும்பவுள்ளார்.