.webp)
Colombo (News 1st) மொறட்டுவை பகுதியில் 21 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினரால் இரத்மலானை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வேன், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கூரிய ஆயுதம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வர்த்தக நிலையமொன்றின் ஊழியரொருவர், கடந்த 04ஆம் திகதி வங்கியில் வைப்பிலிடுவதற்காக 21 இலட்சம் ரூபா பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது குழுவொன்று குறித்த ஊழியரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதுடன், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றிருந்தது.