.webp)
Colombo (News 1st) ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான தௌிவத்தை ஜோசப் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று(23) நடைபெற்றன.
இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கு மகத்தான சேவையாற்றிய தௌிவத்தை ஜோசப் அவர்களின் பூதவுடல் நேற்று(22) முதல் வத்தளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
தௌிவத்தை ஜோசப் தமது 88ஆவது அகவையில் வத்தளையில் கடந்த 21ஆம் திகதி காலமானார்.
அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் இன்று(23) வருகை தந்திருந்தனர்.
விசேட ஆராதனைகளுக்காக வத்தளை புனித அன்னம்மாள் தேவாலயத்திற்கு அன்னாரின் பூதவுடல் கொண்டுசெல்லப்பட்டது.
பின்னர் மாதம்பிட்டி பொது மயானத்தில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.