.webp)
Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றினை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
அயர்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
HOBERT இல் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் பிரகாரம் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் HARRY TECTOR 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்.
129 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.