மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை

மீன் பிடிக்கச் சென்று 28 நாட்களாகியும் 4 மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை

by Bella Dalima 22-10-2022 | 7:29 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு  - வாழைச்சேனை மீன்பிடித்துறையிலிருந்து ஆழ்கடல் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள்  28 நாட்களாகியும் கரைக்கு திரும்பவில்லை. 

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை , மகன்  உள்ளிட்ட 4 மீனவர்கள் கடந்த  மாதம் 25 ஆம் திகதி மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற  நிலையில், இன்னும் கரைக்கு திரும்பவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 

கடந்த 13 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் மீனவர்களின் குடும்பங்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.