.webp)
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலையால் 1297 குடும்பங்களை சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 31 குடும்பங்களை சேர்ந்த 116 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.