கிண்ணியாவில் மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் கொள்ளை

கிண்ணியாவில் மூதாட்டியை தாக்கி தங்க நகைகள் கொள்ளை

by Bella Dalima 22-10-2022 | 4:42 PM

Colombo (News 1st) மூதாட்டி ஒருவரை தாக்கி, தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று திருகோணமலை - கிண்ணியா, புதுநகர் பகுதியில் பதிவாகியுள்ளது.

புதுநகரில் தனிமையில் வசித்து வந்த 79 வயதான மூதாட்டி ஒருவரிடமிருந்தே தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் குறித்த விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.