.webp)

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண முதல் சுற்றில் Group B பிரிவில் உள்ள சிம்பாப்வேயும் ஸ்கொட்லாந்து அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களைப் பெற்றது.
133 ஒட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் George Munsey அதிகூடிய ஓட்டங்களாக 54 ஓட்டங்களை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.
Calum MacLeod 25 ஓட்டங்களையும் Richie Berrington ஓட்டங்களையும் பெற்றனர்.
சிம்பாப்பே அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெஜிஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு வீரரான Craig Ervine நிதானமாக ஆடி 58 ஒட்டங்களைக் குவித்தார். Sikandar Raza 40 ஓட்டங்களையும் Milton Shumba 11 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
Milton Shumba மற்றும் Ryan Burl (9) ஆகிய இருவரும் ஆட்டமிழக்காத நிலையில், சிம்பாப்வே அணி வெற்றியிலக்கை எட்டியது.
