20 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மனு தாக்கல்

20 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சோசலிச இளையோர் சங்கத்தினர் மனு தாக்கல்

by Bella Dalima 21-10-2022 | 8:40 PM

Colombo (News 1st) கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு  இன்றும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சோசலிச இளையோர் சங்கத்தின் 6 செயற்பாட்டாளர்கள்,  20 பொலிஸ்  அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும் நேற்றைய தினமும் இது தொடர்பாக  இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டார்.