புகலிடம் கோரிய 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய கடல்சார் எல்லை கட்டளைத் தளபதி தெரிவிப்பு

by Bella Dalima 21-10-2022 | 8:24 PM

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய கடல்சார் எல்லை கட்டளைத் தளபதியான அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்  தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற  ஆசிய கடலோர பாதுகாப்பு தலைமை முகவர்களின் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் மிகவும் மோசமான பொருளாதார பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதால், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கான அழுத்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவது சட்டவிரோதமானது எனவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.