.webp)
Colombo (News 1st) ''செய் கடமை'' COVID-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதியக் கணக்கு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் கைவிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 18 ஆம் திகதியன்று 21,68,77, 431 ரூபா பணம் COVID நிதியத்தில் மீதமிருந்தது.
இந்த நிதியை ஜனாதிபதி நிதியத்தில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பணம் மக்களின் மருத்துவ நிதிக்காக வழங்கப்படவுள்ளது.