24ஆவது அகவை பூர்த்தியைக் கொண்டாடும் சக்தி TV

24ஆவது அகவை பூர்த்தியைக் கொண்டாடும் சக்தி TV

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2022 | 12:40 pm

Colombo (News 1st) மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்து, தமிழ் பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி தொலைக்காட்சி தனது 24ஆவது அகவை பூர்த்தியை இன்று(20) கொண்டாடுகின்றது.

24ஆவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ள சக்தியுடன் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் இதயபூர்வமான நன்றிகள். 

மரபுகளைத் தகர்த்து பாரதியின் புதுக்கவியாய் வீறு நடைபோடும் சக்தி தொலைக்காட்சி, தொலைக்காட்சி வரலாற்றில் படைத்த சாதனைகளோ ஏராளம்…

சாதனைப் பயணத்தில் 24ஆவது அகவையை பூர்த்தி செய்யும் சக்தி தொலைக்காட்சி, 1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னோடியாய் புதுமைகளின் தாயகமாய் சக்தி TV திகழ்கின்றது.

பல்சுவை நிகழ்ச்சிகளால் நேயர்கள் மனதில் சக்தி தொலைக்காட்சி நீங்காத இடம்பிடித்துள்ளது.

நாட்டின் இலத்திரனியல் ஊடகத்துறைக்கு துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் சக்தி தொலைக்காட்சி, முதல்நிலை மற்றும் முன்னணி இலத்திரனியல் ஊடகமாகத் திகழ்கின்றது. 

கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல் என அனைத்துத் துறைகளிலும் மக்களுக்கு தரமான நிகழ்ச்சிகளை வழங்கிய பெருமை சக்தி TV-க்கு உண்டு.

தனது 24 ஆண்டு கால சாதனைப் பயணத்தில் இலங்கை கலைஞர்களின் இலைமறை காய் திறமைகளுக்கு களமமைத்துக் கொடுக்கவும் சக்தி தொலைக்காட்சி எப்போது தவறவில்லை. 

ரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி TV, தடைக்கற்களை தகர்த்து வெற்றி நடைபோட நியூஸ்பெஸ்ட்டின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.

சக்தி தொலைக்காட்சியின் 24ஆவது அகவை பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய பாடகர்களான சத்திய பிரகாஷ், ஹரிபிரியா மற்றும் நம் நாட்டு கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்