பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இராஜினாமா

by Bella Dalima 20-10-2022 | 6:18 PM

Britain: தமது பதவியை இராஜினாமா செய்வதாக பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) அறிவித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகுவது தொடர்பில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸூக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலத்திற்கு முன்பாகவிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடிக்களுக்கு மத்தியிலேயே தாம் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

தம்மால் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரத்திற்குள் நடத்தப்பட வேண்டுமெனவும் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர்களின் அடுத்தடுத்த விலகல்களால் பிரித்தானிய அரசியலில் எதிர்பாராத குழப்பம் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.