ஒக்டோபர் 25 தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஒக்டோபர் 25 ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

by Bella Dalima 20-10-2022 | 10:29 PM

Colombo (News 1st) எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில், அதற்கு அடுத்த தினமான ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். 

தீபாவளி தினத்திற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவு குறைவாக இருக்கும் என்பதனால்,  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கு பதிலாக, ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் எந்த பாகத்திலாவது இந்த விடுமுறை அவசியமில்லை என கருதும் பட்சத்தில், வழமைபோன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைகளை நடத்த முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.