.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றில் சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Hobart மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகூடிய ஓட்டங்களாக 45 ஓட்டங்களை Johnson Charles பெற்றுக்கொடுத்தார்.
Rovman Powell 28 ஓட்டங்களையும் Akeal Hosein 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
அணி சார்பில் அதிகூடிய 29 ஒட்டங்களை Luke Jongwe பெற்றுக்கொடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் Alzarri Joseph 4 விக்கெட்களையும், Jason Holder 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
.