பயங்கரவாத தடைச்சட்டம்;8 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுவிக்க தீர்மானம்

by Bella Dalima 19-10-2022 | 4:55 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்களை விடுதலை செய்வதற்கான அறிவித்தல் நீதி அமைச்சில் இருந்து இன்று தமக்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள்  ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அவர்களில் ஐவரை விடுதலை செய்ய முடியும் எனவும், ஏனைய மூவரும் ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ளமையினால், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கையின் பின்னரே அவர்கள் தொடர்பிலான செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் சிறைச்சாலைகள்  ஆணையாளர் கூறினார்.

இதனிடையே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 8 பேரை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு தமிழ் ​தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் இன்று நன்றி தெரிவித்தார்.