காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தெரிவு

by Bella Dalima 19-10-2022 | 4:37 PM

Colombo (News 1st) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (18)  காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளை மாத்திரமே பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பின் நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார். 

இதற்கு முன் நேரு - காந்தி குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரி 1996-98 காலகட்டத்தில் இப்பதவியில் இருந்தார்.

தற்போது 80 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநில அரசியலில் காங்கிரசின் முக்கியத் தலைவராக இருந்தவர்.