.webp)
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியத்தை இலங்கை 79 ஓட்டங்களால் வீழ்த்தியது.
மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராச்சியம் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனால் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க 60 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்தார்.
தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களும் குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களும் பெற்றனர்.
ஐக்கிய அரபு இராச்சியம் சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் மெய்யப்பன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
ICC போட்டித் தொடரொன்றில் ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த வீரர் ஒருவர் பெற்ற முதலாவது Hat-trick விக்கெட்டுக்கள் இவையாகும்.
பின்னர் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய வீரர்கள் இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர்.
அடுத்தடுத்து விக்கெட்கள் சாய்ந்த நிலையில், 17.1 ஓவர் முடிவில் அந்த அணி 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர, ஹசரங்க டி சில்வா தலா 3 விக்கட்களையும் மஹீஸ் தீக்ஷன 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பிரமோத் மதுஷான், தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.