கொக்கைனுடன் சுரினாம் யுவதி கைது

130 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைனுடன் சுரினாம் யுவதி கைது

by Bella Dalima 18-10-2022 | 6:58 PM

Colombo (News 1st) 2.5 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் நாட்டிற்கு வருகை தந்த சுரினாம் நாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுங்கப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான குறித்த யுவதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கொக்கைன் 130 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யுவதி பிரேஸிலில் இருந்து கட்டார் சென்று, அங்கிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் யுவதியை ஒப்படைத்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டது.