வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை ஒரு வருடத்தால் நீடிப்பு

by Bella Dalima 18-10-2022 | 6:47 PM

Colombo (News 1st) வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மேலும் ஒரு வருடத்திற்கு அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சுகாதார துறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அதற்கமைய, வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை ஒரு வருடத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு பின்னரான காலப்பகுதியில் எனைய ஊழியர்களைப் போன்றே வைத்தியர்களும் ஓய்வு பெறுவார்கள் என அமைச்சர் பந்துல குவர்தன சுட்டிக்காட்டினார். 

இதன் படி,  63 வயதை பூர்த்தி செய்த வைத்தியர்கள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவர். 62 வயதான வைத்தியர்கள் 63 வயது பூர்த்தியாகும் போது ஓய்வு பெறுவர். 61 வயதான வைத்தியர்கள்  62 வயதை பூர்த்தி செய்யும் போது ஓய்வு பெறுவர். 60 வயதான வைத்தியர்கள் 61 வயதை பூர்த்தி செய்யும் போதும் 59 வயதான வைத்தியர்கள் 60 வயதை பூர்த்தி செய்யும் போதும் ஓய்வு பெறுவர்.