.webp)
Colombo (News 1st) பெட்ரோலிய உற்பத்தி விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், சட்டமூலம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 17 வாக்குகள் மாத்திரமே வழங்கப்பட்டன.
இந்நிலையில், பெட்ரோலிய உற்பத்தி விசேட ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டனர்.
பொதுஜன பெரமுன கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கமான பெட்ரோலிய பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தினர், குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கத்தினர் இன்று சுகயீன விடுமுறையை அறிக்கையிட்டமையால், எரிபொருள் விநியோகத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.