தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் - மனோ கணேசன்

by Staff Writer 17-10-2022 | 5:37 PM

Colombo (News 1st) பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலி அடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரதிநிதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மனிதர் வாழ தகைமையற்ற வாழ்விடங்கள், அரைகுறை சுகாதார நிலைமைகள், போஷாக்கின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்சினைகளால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தோட்டத் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலையை செய்தாலும் குறைந்த வேதனத்தைப் பெற்றுக் கொள்வதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தோட்ட நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் கலந்துரையாடுமாறு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரதிநிதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.