பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு

பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு

by Staff Writer 17-10-2022 | 2:52 PM

Colombo (News 1st) இன்றிரவு(17) 09 மணி முதல் அமுலாகும் வகையில் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

அதற்கமைய, 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 415 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு அமைய, தமது எரிபொருள் விலையும் குறைக்கப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.